திருச்செந்தூர் முருகன் கோவிலில் மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்த பாமக தலைவர் அன்புமணி.!
திருச்செந்தூர் முருகன் கோவிலில் மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்த பாமக தலைவர் அன்புமணி.!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், தனது மனைவி சௌமியா அன்புமணியுடன் சாமி தரிசனம் செய்தார்.
சத்ரு சம்ஹார பூஜை
அப்போது, அவர் எடைக்கு எடை துலாபாரம் வழங்கிய நிலையில், மொத்தமாக 750 கிலோ அரிசி வழங்கப்பட்டது. இதற்குப்பின் எதிரிகளின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த செய்யப்படும் சத்ரு ஸம்ஹார பூஜையிலும் அவர் கலந்துகொண்டார்.
இதையும் படிங்க: நா.த.க - திமுக கூட்டணிக்கு பேச்சுவார்த்தை; உண்மையை போட்டுடைத்த சீமான்.. பரபரப்பு தகவல்கள்.!
2026 ல் புதிய வியூகத்துடன் தேர்தல்
2024 மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்ட பாமக, ஒரு தொகுதிகளை கூட கைப்பற்றாமல் தோல்வியை அடைந்தது. 2026 சட்டப்பேரவை தேர்தலில் புதிய வியூகத்துடன் தனியாக களமிறங்கி தேர்தலை சந்திப்பதாக அக்கட்சி தலைமை கூறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கொலை வழக்கில் சிக்கி ஜாமினில் வந்த அதிமுக பிரமுகர் கொடூர கொலை.. பழிக்குப்பழியாக பயங்கரம்.!