Lok Sabha 2024| "கூடாரத்தை காலி செய்த கூட்டம் பாமக"... பிரேமலதா விஜயகாந்த் கடும் விமர்சனம்.!
Lok Sabha 2024| கூடாரத்தை காலி செய்த கூட்டம் பாமக... பிரேமலதா விஜயகாந்த் கடும் விமர்சனம்.!
2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலில் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கிட்டை முடித்து வேட்பாளர்களை அறிவித்து தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகிறது. 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு தமிழகம் உட்பட பல மாநிலங்களில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரை ஆளும் கட்சியான திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான கூட்டணி மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆகியவற்றிற்கு இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் கடந்த தேர்தல்களில் பாஜக உடன் இணைந்து பயணித்த அதிமுக இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் தங்கள் தலைமையில் கூட்டணியை அமைத்திருக்கிறது.