×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தமிழகத்தின் அனைத்து கடைகளிலும் நாங்கள் வருவதற்குள் நீங்களே மாற்றிவிடுங்கள் - பாமக ராமதாஸ் பகிரங்க எச்சரிக்கை..!

தமிழகத்தில் அனைத்து கடைகளும் நாங்கள் வருவதற்குள் நீங்களே மாற்றிவிடுங்கள் - பாமக ராமதாஸ் பகிரங்க எச்சரிக்கை..!

Advertisement

ஏணியோடும் - கருப்பு மையோடும் சுவரொட்டி, அறிவிப்பு பலகைகளை நோக்கி நாங்கள் படையெடுப்பதற்குள் நீங்கள் அதனை அகற்றிவிடுங்கள் என பாமக நிறுவனர் எச்சரித்தார்.

தமிழைத் தேடி என்ற வாதத்தை முன்வைத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சென்னையில் இருந்து மதுரை வரை பிரச்சார பயணம் மேற்கொண்டு இருந்தார். இன்று செய்தியாளர்களை சந்தித்தவர், "நான் தமிழகத்தில் எங்கு தேடியும் தமிழ் கிடைக்கவில்லை. வணிக நிறுவனங்கள் வைத்துள்ள பெயர் பலகைகளில் தமிழ் தவிர்த்து பிற மொழிகள் இருக்கின்றன. 

அனைத்து கடைகளிலும் ஆங்கிலமே ஆதிக்கம் செய்கிறது. ஆதலால் அதனை அகற்ற வேண்டும். இதற்கான சட்டம் கடந்த 1977 ஆம் ஆண்டு இயற்றப்பட்டு விட்டது. தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு கடையிலும் ஒரு மாதத்திற்குள் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும். 

முதலில் பெரிய அளவில் தமிழில் பெயர் பலகை வைத்துவிட்டு, அந்த பலகையில் ஆங்கிலம், அதன் பின்னர் அவரின் விருப்பம் மொழி என வைத்துக் கொள்ளட்டும். ஆனால் தமிழ் அதில் கட்டாயம் பெரிய அளவில் இடம்பெற வேண்டும். 

அவ்வாறு இல்லாத பட்சத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினர், தமிழ் ஆர்வலர்களும் கருப்பு மையோடும் ஏணியோடும் அடுத்த மாதம் வணிக நிறுவனங்களின் பேனர்களை நோக்கி படையெடுப்போம். வணிகர்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு தாருங்கள். நீங்களும் தமிழர்களே. தமிழ் உணர்வு உள்ளவர்கள் இதற்கு ஒத்துழைப்பு தாருங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#pmk #Ramadoss speech #ராமதாஸ் பேச்சு #தமிழ்நாடு அரசியல் #tamilnadu political #Latest news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story