நடிகர் பிரகாஷ் ராஜுக்கு ஒரு விசில போடுவோமா.. ஏன் தெரியுமா?
prakash raj - election 2019 -karnadaka- bengalur- visil

தமிழ் சினிமாவில் உச்ச திரை நட்சத்திரங்களுள் ஒருவர் நடிகர் பிரகாஷ்ராஜ். சிறந்த வில்லன், குணச்சித்திர நடிகர், நகைச்சுவை என அனைத்து கதாபாத்திரங்களிலும் பரிணமித்து தனக்கே உரித்தான ஆளுமை நடிப்பை வெளிப்படுத்தியவர். ஒரு படத்தில் நடித்தால் அவர் நடிக்கும் படங்களின் வசனங்கள் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்து விடும்.
தமிழ் சினிமாவைப் போல் தெலுங்கு, கன்னட மொழிப் படங்களிலும் இதே அளவுக்கு பிரபலமானவர். சமீப காலமாக மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வந்த அவர் தற்போது மக்களவைத் தேர்தலில் கர்நாடகம் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்திருந்தார்.
மேலும், மதச்சார்பற்ற கட்சிகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் அவருக்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் அவருக்கு விசில் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக வெற்றி பெற்றால், கடந்த 52 ஆண்டுகளுக்கு பிறகு கர்நாடகாவில் இருந்து சுயேட்சையாக நாடாளுமன்றம் செல்பவர் என்ற பெருமையை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.