"பெயரில் இந்தியாவை சேர்ப்பதால் எந்த மாற்றமும் ஏற்படாது" - பிரதமர் மோடி
பெயரில் இந்தியாவை சேர்ப்பதால் எந்த மாற்றமும் ஏற்படாது - பிரதமர் மோடி
எதிர்க்கட்சியினர் கூட்டணி அமைத்து ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதற்கு ராகுல் காந்தி INDIA என்று பெயர் வைத்திருந்தார்.
இதனை விமர்சிக்கும் விதமாக பிரதமர் மோடி பெயரில் இந்தியாவை சேர்ப்பதால் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, டெல்லியில் பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி பெயரில் இந்தியாவை சேர்ப்பதால் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடாது.
கிழக்கு இந்திய கம்பெனி பெயரில் கூட தான் இந்தியா என்று இருக்கிறது. இதுபோன்ற திசையற்ற எதிர்கட்சிகளை இதுவரை கண்டதே இல்லை என்று பிரதமர் மோடி கூறினார்.