அரசியலில் பரபரப்பு: தேர்தல் தோல்வி எதிரொலி.!! பாஜக கூட்டணியில் விரிசல்.?
அரசியலில் பரபரப்பு: தேர்தல் தோல்வி எதிரொலி.!! பாஜக கூட்டணியில் விரிசல்.?
2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியின் எதிரொலியாக புதுச்சேரி மாநிலத்தின் ஆளும் கூட்டணியான பாஜக மற்றும் என்.ஆர் காங்கிரஸ் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் படுதோல்வியை சந்தித்த பாஜக
2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி நிறைவடைந்தது. இந்த தேர்தலில் பாஜக மற்றும் கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தது. எனினும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் படுதோல்வி அடைந்தது. தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் புதுச்சேரியில் உள்ள ஒரு பாராளுமன்ற தொகுதியிலும் பாஜக கூட்டணிக்கு தோல்வி கிடைத்தது.
பாஜக கூட்டணியில் விரிசல்
இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் என்.ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சியினரிடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. புதுச்சேரி மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு அம்மாநில முதல்வர் ரங்கசாமி தான் காரணம் என பாஜக எம்எல்ஏக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் அரசுக்கு வழங்கி வரும் ஆதரவையும் திரும்ப பெற இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் பாஜக எம்எல்ஏக்கு ஆதரவாக சுயேட்சை எம்எல்ஏக்களும் போர்க்கொடி தூக்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: "மக்களின் வாக்குகளை பெறுவதற்கு மட்டும்தான் சமூக நீதியா.?.." திமுக அரசுக்கு பா ரஞ்சித் கேள்வி.!!
இதையும் படிங்க: தர்மயுத்தம்: "எடப்பாடி பழனிச்சாமி துரோகத்தின் மொத்த உருவம்.." ஓபிஎஸ் கண்டன அறிக்கை.!