#Just in | ராகுல் காந்திக்கு மீண்டும் எம்பி பதவி! ஸ்வீட் எடு கொண்டாடு., டீம் INDIA செலிப்ரேஷன்!
#Just in | ராகுல் காந்திக்கு மீண்டும் எம்பி பதவி! ஸ்வீட் எடு கொண்டாடு., டீம் INDIA செலிப்ரேஷன்!
கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தின்போது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சனம் செய்தார். மோடி என்ற பெயர்கொண்டவர்கள் என குறிப்பிட்டு சர்ச்சை கருத்தை தெரிவித்தார்.
இது மோடி சமூக மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்த, ராகுல் காந்தியின் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சூரத் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், ராகுலின் மீதான குற்றசாட்டு உறுதி செய்யப்பட்டு அவரின் எம்.பி பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து, ராகுல் காந்தி விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து, தற்போது அவருக்கு எம் பி பதவி மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அரசியலின் டீம் INDIA இனிப்பு வழங்கி கொண்டாடி வருகிறார்கள்.