#Breaking: ராகுல் காந்திக்கு எதிரான வழக்கில் குஜராத் உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.. அடிமேல் அடிவாங்கும் ராகுல்.! விபரம் உள்ளே.!!
#Breaking: ராகுல் காந்திக்கு எதிரான வழக்கில் குஜராத் உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.. அடிமேல் அடிவாங்கும் ராகுல்.! விபரம் உள்ளே.!!
கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தின்போது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சனம் செய்தார். மோடி என்ற பெயர்கொண்டவர்கள் என குறிப்பிட்டு சர்ச்சை கருத்தை தெரிவித்தார்.
இது மோடி சமூக மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்த, ராகுல் காந்தியின் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சூரத் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், ராகுலின் மீதான குற்றசாட்டு உறுதி செய்யப்பட்டு அவரின் எம்.பி பதவி நீக்கம் செய்யப்பட்டது.
அதுமட்டுமல்லாது, அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இன்று அம்மனு மீதான விசாரணையின்போது, காங்கிரஸ் தரப்பு மேல்முறையீடு மனுவை தல்ல்லுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதிகள், ராகுல் காந்தியின் தண்டனைகளுக்கு தடை விதிக்க இயலாது என்று தெரிவித்துவிட்டது. அதேபோல, அவரின் தகுதி நீக்கமும் செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது.
மனுதாரர் வேண்டும் என்றால் டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்ப்படுகிறது என்றும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் ராகுல் காந்தி எம்.பியாக தொடர இயலாத நிலை உறுதி செய்யப்பட்டுள்ளது.