ஓட்டுக்கேட்டு போன ரோஜாவை, அவமதித்த கிராம மக்கள்.! பின் நடந்த சம்பவம்.!
ஓட்டுக்கேட்டு போன ரோஜாவை, அவமதித்த கிராம மக்கள்.! பின் நடந்த சம்பவம்.!
ஆந்திர மாநிலத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகளுக்கு வரும் மே 13ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தாங்கள் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் தங்களது கட்சி சார்ந்த வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஆந்திர மாநிலத்தின் நகரி தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி பெற்ற நடிகையும், அரசியல்வாதியமான ரோஜா மீண்டும் அதே தொகுதியில் தற்போது போட்டியிடுகிறார். எனவே தனது தொகுதி மக்களிடம் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்.
அதனடிப்படையில் வேமாபுரம் கிராமத்திற்கு ரோஜா வாக்கு சேகரிப்பிற்காக சென்றபோது அந்த கிராமத்திற்கு ரோஜாவை நுழைவிடாமல் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து, அவர்கள் கடந்த 5 ஆண்டுகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றும் கூட ரோஜா தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். அவர்களது எதிர்ப்பையும் மீறி ரோஜா பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் கிராம மக்கள் அனைவரும் தங்களுடைய வீடுகளுக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.