தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 விரைவில் வழங்கப்படும்: தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் உறுதி..!

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 விரைவில் வழங்கப்படும்: தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் உறுதி..!

Rs. 1000 will be provided soon Tamil Nadu Finance Minister Palanivel Thiagarajan Advertisement

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான கணக்கெடுப்புகள் நடைபெற்று வருகிறது. விரைவில் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

மதுரையில் உள்ள ஒளவை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 25 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் பள்ளி கட்டிடத்தை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று திறந்து வைத்தார்.

பின்னர் மதுரை மகபூப்பாளையம் பகுதியில் உள்ள சட்ட மன்ற அலுவலகத்தில் நிதியமைச்சர் செய்தியாளர்கள்சந்திப்பில் பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மேலும் கூறியதாவது:-

இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக ஸ்டார்ட் அப் நிறுவனங்களிடம் அரசு நேரடியாக கொள்முதல் செய்யப்பட உள்ளது. அதன்படி 133 நிறுவனங்கள் ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தன. அவற்றில் 25 நிறுவனங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

புதிய கண்டுபிடிப்புகளையும் இளைஞர்களையும் ஊக்குவிக்கும் விதமாக நிறுவனத்தின் கொள்முதல் திட்டம் தொடங்கப்பட உள்ளது.

குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்குவதற்கான விவரங்களை சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. நகைக்கடன் தள்ளுபடி, 4 ஆயிரம் ரூபாய் கடன் நிவாரண உதவி வழங்கியது போன்று தகுதியுடைய நபர்களுக்கு உரிமைத்தொகை வழங்குவதற்கான விவரங்களை சேகரித்து வருகிறோம். எவ்வளவு விரைவில் உரிமைத் தொகை வழங்க முடியுமோ அவ்வளவு விரைவில் வழங்கப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#PTR Palanivel Thiyagarajan #FinanCe minister #Tn govt #Rs 1000
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story