ஒருத்தன் துணிந்துவிட்டால் உன் நிலைமை என்ன? - சீமானுக்கு ஆர்.எஸ் பாரதி பகிரங்க எச்சரிக்கை...!
ஒருத்தன் துணிந்துவிட்டால் உன் நிலைமை என்ன? - சீமானுக்கு ஆர்.எஸ் பாரதி பகிரங்க எச்சரிக்கை...!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த ஜனவரி 08ம் தேதி கடலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஈ.வே இராமசாமி பெரியார் குறித்து சில சர்ச்சைக்குரிய வார்த்தைகளை உபயோகப்படுத்தி பேசி இருந்தார்.
இந்த விஷயம் பெரியாரிய உணர்வாளர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தவே, சீமானுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அவரின் வீடும் முற்றுகையிடப்பட்டது. இந்நிலையில், பெரியார் குறித்து அவதூறு பேசி வரும் சீமான், அதனை கைவிட வேண்டும் என ஆர்.எஸ் பாரதி பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: #Breaking: புதுச்சேரியில் பதற்றம்.. நாம் தமிழர் - தந்தை பெரியார் இயக்க நிர்வாகிகள் தள்ளுமுள்ளு.., மோதல் சூழல்.!
ஆர்.எஸ் பாரதி எச்சரிக்கை
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி பேசுகையில், "சீமான் கருணாநிதி, பெரியார் குறித்து இழிவுபடுத்தி பேசுவதை இனி கைவிட வேண்டும்.
அவ்வாறு அவர் கைவிடாத பட்சத்தில் பின் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும். தலைவர் கருணாநிதி கைது செய்யப்படும்போது 21 பேர் தீக்குளித்து உயிர்நீத்தார். அதேபோல, இன்று 21 பேர் வேண்டாம், ஒருவர் துணிந்தால் சீமான் உன் நிலை என்னவாகும் என்பதை தெரிந்து செயல்பட வேண்டும்" என பேசினார்.
இதையும் படிங்க: #Breaking: புதுச்சேரியில் பதற்றம்.. நாம் தமிழர் - தந்தை பெரியார் இயக்க நிர்வாகிகள் தள்ளுமுள்ளு.., மோதல் சூழல்.!