வருகிறார் ராஜமாதா... மீண்டும் களமிறங்கிய சசிகலா.!! கலக்கத்தில் இபிஎஸ் கோஷ்டி.!!
வருகிறார் ராஜமாதா... மீண்டும் களமிறங்கிய சசிகலா.!! கலக்கத்தில் இபிஎஸ் கோஷ்டி.!!
பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் சலசலப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் அந்தக் கட்சியை ஒருங்கிணைப்பதற்காக அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சசிகலா
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா, ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கு காரணமாக சிறைக்குச் சென்ற அவரை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதோடு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கினார் எடப்பாடி பழனிச்சாமி.
அதிமுகவில் சலசலப்பு
பாராளுமன்றத் தேர்தலில் தோல்விக்கு பிறகு அதிமுக கட்சியில் சலசலப்பு ஏற்பட்டு இருக்கிறது. அந்தக் கட்சியின் முன்னாள் தலைவர்களான சசிகலா, ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் பலரும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அதிமுக கட்சியினரிடையே இருவேறு கருத்துக்கள் நிலவி வருகிறது.
இதையும் படிங்க: பரபரப்பு... அதிமுகவில் வெடித்த உட்கட்சி மோதல்.!! இபிஎஸ்-க்கு எதிராக திரும்பும் முன்னாள் அமைச்சர்கள்.!!
களத்தில் இறங்கிய சசிகலா
இந்த சூழலில் அதிமுக கட்சியை ஒருங்கிணைப்பதற்காக தொண்டர்களை சந்திக்க திட்டமிட்டு இருக்கிறார் சசிகலா. இதன் முதல் கட்டமாக வருகின்ற ஜூலை 17ஆம் தேதியிலிருந்து தென்காசி மாவட்டத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து அதிமுக கட்சியை ஒருங்கிணைப்பது தொடர்பாக ஆதரவு திரட்ட இருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கிறது. இதனால் எடப்பாடி கோஷ்டியினர் கலக்கத்தில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.
இதையும் படிங்க: "மக்களின் வாக்குகளை பெறுவதற்கு மட்டும்தான் சமூக நீதியா.?.." திமுக அரசுக்கு பா ரஞ்சித் கேள்வி.!!