தமிழகத்தில் காலியாக உள்ள 4040 செவிலியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்.
saviler pani edankal nerappapadum amaicher vijayabasker
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 4040 செவிலியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று தஞ்சை மருத்துவ கல்லூரியில் நடந்த விழாவில்
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மருத்துவக் கல்லூரியில் செயல்பட்டு வந்த பழைய எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்யும் கருவி மாற்றப்பட்டு அதற்கு பதிலாக 6 கோடி மதிப்பில் புதிய எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பொருத்தப்பட்டு உள்ளது. அதனை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் துவக்க விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் கூறும்போது பழைய கருவியின் மூலம் ஸ்கேன் செய்ய அரை மணி நேரம் ஆனது தற்பொழுது புதிய கருவியின் மூலம் பத்து நிமிடத்தில் ஸ்கேன் செய்ய முடியும் என்று தெரிவித்தார்.
மேலும் இன்னும் 4 மாதங்களில் 18 கோடி செலவில் தமிழகத்திலேயே முதன்முறையாக தஞ்சை மருத்துவக் கல்லூரியில் புற்றுநோயை கண்டறிந்து சிகிச்சை அளிக்க கூடிய அதிநவீன கருவி பொருத்தப்பட உள்ளது. மற்றும் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் 150 கோடியில் விரைவில் அமைய உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தமிழகத்தில் காலியாக உள்ள 4040 செவிலியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. அதில் 740 பணியிடங்கள் இன்னும் ஒரு வாரத்திற்குள் நிரப்பப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.