உதயநிதி விரைவில் துணை முதல்வராகவும் வாய்ப்பு உள்ளது!. அவருக்கு என் வாழ்த்துகள்: சீமான் அதிரடி..!
உதயநிதி விரைவில் துணை முதல்வராகவும் வாய்ப்பு உள்ளது!. அவருக்கு என் வாழ்த்துகள்: சீமான் அதிரடி..!
உதயநிதி ஸ்டாலின் விரைவில் தமிழக துணை முதல்வராக பதவியேற்கவும் வாப்புள்ளதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சென்னை, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தி.மு.க இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இண்று தமிழக அமைச்சராக பதவியேற்கிறார் என்று ஆளுனர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சென்னை, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்தார். முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்ற ஆளுனர் இன்று உதயநிதி ஸ்டாலினுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
இன்று காலை 9.30 மணிக்கு ஆளுனர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் பதவியேற்பு விழா நடைபெறும் என கவர்னர் மாளிகை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் உதயநிதி ஸ்டாலினுக்காக தனி அறை ஒன்று தயாராகி வருகிறது.
இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுத்தது எதிர்பார்த்த ஒன்றுதான் என்றும், விரைவில் அவர் துணை முதல்வராக பதவியேற்பதற்கு அதிக வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் அமைச்சராக பொறுபேற்கவுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.