போரட்டத்தில் துப்பாக்கி சூடு: சிவ சேனா தலைவர் பலி..! அடையாளம் தெரியாத நபர் அட்டூழியம்..!
போரட்டத்தில் துப்பாக்கி சூடு: சிவ சேனா தலைவர் பலி..! அடையாளம் தெரியாத நபர் அட்டூழியம்..!
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரசில் சிவசேனா தலைவர் துப்பக்கியால் சுட்டு படுகொலை.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள ஒரு கோவிலில் உள்ள சிலைகள் சேதபட்டுத்தபட்டன. இந்நிலையில் உடைக்கப்பட்ட சிலைகள் கோவில் வளாகத்துக்கு வெளியே குப்பையில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து சிவசேனா கட்சி போராட்டம் நடத்தியது. சிவசேனா தலைவர் சுதிர் சூரி தலைமியில் கோவிலுக்கு வெளியே போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் அங்கு வந்த காவல்துறையினர் அவருடன் சமரச போச்சுவார்த்தையில் நடத்தினர். அப்போது சூரியை அடையாளம் தெரியாத ஒருவர் துப்பக்கியால் சுட்டார். இதில் சூரி படுகாயம் அடைந்தார். இதனையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டார். அங்கு சுதிர் சூரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். துப்பாக்கி சூடு நடத்தியவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சுதிர் சூரி ஹிட் லிஸ்டில் இருப்பதாகவும், அவருக்கு முன்னதாகவே பாதுகாப்பு வழங்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. துப்பாக்கி சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரை கூட்டத்தில் இருந்தவர்கள் மடக்கி பிடித்தனர், பின்னர் அவரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து பாஜக தலைவர் தஜிந்தர் சிங் பக்கா கூறும் போது பஞ்சாபில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்று கூறியுள்ளார்