இந்தியா - பாரத்: பெயர் மாற்றம் விவகாரம்! சீறி எழுந்த முதலமைச்சர் விட்ட சவால்!!
இந்தியா - பாரத் பெயர் மாற்றம் விவகாரம்! சீறி எழுந்த முதலமைச்சர் விட்ட சவால்!!
ஜி-20 தலைவர்களுக்கு அளிக்கப்பட உள்ள அழைப்பிதழில், President of Bharat என்ற பெயரில் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் பிஜேபி இந்தியா என்ற சொல்லை மாற்றி பாரத் என்று வைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பாரத் மாதாகி ஜே! என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் தமிநாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின் இதற்கு கருத்து தெரிவிக்கும் வகையில் அவரது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்ததாவது:-
"பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு #INDIA என்று பெயர் சூட்டியதில் இருந்து பா.ஜ.க.வுக்கு இந்தியா என்ற சொல்லே கசந்துவருகிறது.
இந்தியாவை வளர்ச்சிமிகு இந்தியாவாக மாற்றப் போகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா என்ற பெயரை மட்டும்தான் மாற்ற முடிந்திருக்கிறது.
அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப் போல இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை மிரட்டுகிறது. தேர்தலில் இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை விரட்டும்!" என பதிவிட்டிருந்தார்.