தமிழக பாஜக தலைவர் பதவிக்கு ஆசைப்படும் எஸ். வி. சேகர்; கிண்டலடிக்கும் தமிழிசை!!
tamilisai talks against sv sekar
தற்போது மத்தியில் ஆளும் பிரதமர் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான பாஜக அரசு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பாஜக கட்சியை வலுப்படுத்த பல்வேறு திட்டங்களை வகுத்துக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இந்தியாவின் வட பகுதியில் அமைந்துள்ள பெரும்பான்மையான மாநிலங்களில் கட்சியின் பலத்தை அதிகரித்து பல மாநிலங்களில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. ஆனால் தென்னிந்தியாவில் கட்சியின் பலத்தை இன்னும் அதிகரிக்க முடியாத சூழ்நிலையே நிலவி வருகிறது.
இதனைத் தொடா்ந்து தமிழகத்தில் தற்போது பாஜக மாநில தலைவராக செயல்பட்டு கொண்டிருப்பவர் தமிழிசை சவுந்தரராஜன். அவருடைய பதவிக் காலம் அடுத்த ஆண்டு 2019 நிறைவடைய உள்ள நிலையில் இவரது தலைமையில் தமிழகத்தில் பாஜக வாக்கு வங்கி சதவீதமானது உயரவில்லை என்று அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பிரபல தமிழ் நாடக மற்றும் திரைப்பட நடிகர் எஸ். வி. சேகர் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பிறகு பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில்
தமிழக பாஜக தலைமையை நான் ஏற்க தயாராக இருப்பதாகவும் கட்சி என்னை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார். நான் தமிழக பாஜக தலைமையை ஏற்றால் இப்போது இருக்கும் வாக்கு சதவிகிதத்தை விட அதிகமாக உயர்த்தி உயர்த்தி காட்டுவேன் என்று கூறியிருக்கிறார்.
கட்சி என்னை பயன்படுத்திக் கொண்டால் கட்சிக்கு நன்மை உண்டாகும் என்றும் அவ்வாறு பயன்படுத்தவில்லை என்றால் எனக்கு எந்த நஷ்டமும் இல்லை என்றும் பரபரப்பாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது கட்சியில் உள்ள முன்னணி பாஜக தலைவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் எஸ்.வி.சேகரின் கருத்திற்கு தமிழிசை சௌந்தரராஜன் சிரித்தவாறே பதில் அளிக்கையில், அவா் பல நாடகங்களில் நடித்து நடித்து தற்போதும் நாடகத்தில் பேசுவதாக நினைத்து பேசியிருக்கலாம். பா.ஜ.க.வின் மாநிலத் தலைமை என்றால் அவ்வளவு சுலபமான பதவியா என்று பதில் அளித்துள்ளாா்.