ரூ.411 கோடி அரசு நிலத்தை ஆக்கிரமித்த அமைச்சர் ராஜ கண்ணப்பன்? அறப்போர் இயக்கம் பரபரப்பு குற்றச்சாட்டு.!
ரூ.411 கோடி அரசு நிலத்தை ஆக்கிரமித்த அமைச்சர் ராஜ கண்ணப்பன்? அறப்போர் இயக்கம் பரபரப்பு குற்றச்சாட்டு.!
தமிழ்நாடு மாநில அமைச்சர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், தனது மகன்களின் வாயிலாக ரூ.411 கோடி மதிப்புள்ள 5 ஏக்கர் நிலம் ஒன்றை அபகரித்துள்ளதாகவும், சென்னை ஜிஎஸ்டி சாலையில் இருக்கும் நிலத்தினை அபகரித்து குடும்பத்தின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.
விசாரணை நடத்த கோரிக்கை
இந்த புகார் ஆதாரத்துடன் இலஞ்ச ஒழிப்புத்துறை, முதல்வர், துணை முதல்வர், தலைமை செயலர், வருவாய்த்துறை அமைச்சர் ஆகியோர்களுக்கு மனு வழங்கப்பட்டுள்ளது. அறப்போர் இயக்கம் சார்பில் அமைச்சருக்கு எதிராக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திமுகவினர் - பொதுமக்கள் கடும் மோதல் போக்கு.. குமரியில் பரபரப்பு சம்பவம்.. அதிர்ச்சி வீடியோ வைரல்.!
அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு
ஜிஎஸ்டி சாலையில் இருக்கும் ஆலந்தூர் மெட்ரோ - நங்கநல்லூர் மெட்ரோ யிடையே, பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு அடுத்து, பரங்கிமலை கிராமத்தில் இருக்கும் அரசு புறம்போக்கு நிலத்தை ராஜகண்ணப்பன் தனது மகன்கள் வாயிலாக ஆக்கிரமித்து அதனை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிமுகவில் விலகி திமுகவில் ஐக்கியம்; மாஸ் காட்டும் அமைச்சர் செந்தில் பாலாஜி.!