காது குத்தியது பேரப்பிள்ளைகளுக்கா? வருமான வரித்துறைக்கா?; மொய் விருந்தில் விஞ்ஞான ஊழல்: அண்ணாமலை கொந்தளிப்பு..!
காது குத்தியது பேரப்பிள்ளைகளுக்கா? வருமான வரித்துறைக்கா?; மொய் விருந்தில் விஞ்ஞான ஊழல்: அண்ணாமலை கொந்தளிப்பு..!
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தி.மு.க எம்.எல்.ஏ அசோக்குமார் நடத்திய மொய் விருந்து குறித்தும் 11 கோடி ரூபாய்க்கு மேல் மொய் பணம் வசூலானது குறித்தும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:-
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தி.மு.க எம்.எல்.ஏ நடத்திய மொய் விருந்தில் 11 கோடி ரூபாய்க்கு மேலே, மகசூல் அமோகம். இத்தனை பெரிய அறுவடை நிகழ்த்திக் காட்டிய தனியாள் இதுவரை யாரும் இல்லை. வாழ்வதற்கு வழி இல்லாமல் பணம் உடையில் சிக்கித் தவிப்பவர்கள், வட்டிக்கு பணம் இல்லாமல் வாங்காமல் வாழ்விலே மீண்டு வர கடைசி வாய்ப்பு என்பது மொய் விருந்து நடத்துவது. அதை தன் சுயலாபத்திற்காக 100 ஆடுகளை வெட்டி மட்டன் குழம்பாக, குடல் கிரேவி, சிக்கன் ரோஸ்ட் என தடபுடலாக 8 ஆயிரம் பேருக்கு மேல் விருந்து வைத்து தூள் கிளப்ப அசைவ சாப்பாடும், சைவ சாப்பாடும் பரிமாறி இருக்கிறார் தி.மு.க எம்.எல்.ஏ அசோக்குமார்.
ஆனால், இந்த விருந்தின் சுவையான பகுதியே மொய்க்கான ஏற்பாடுகள் தான். சுமார் 40 மொய் வாங்கும் கவுண்ட்டர்கள், கட்டு கட்டாக வரும் பணத்தை எண்ணிப் பார்க்க பணம் என்னும் இயந்திரம், அதை உடனடியாக வங்கிக் கணக்கில் சேர்க்க வங்கி அதிகாரிகள் என்று குட்டி ரிசர்வ் வங்கி போல மொய் வசூல் மையம் நடத்தப்பட்டுள்ளது வியப்பளிக்கிறதா? இல்லையா? மொய் விருந்துக்கு வந்தவர்கள் ரூ. 1000-ல் தொடங்கி 5 லட்சம் வரை அவரவர் வசதிக்கேற்ப மொய் செய்துள்ளனர். இது சத்தியமா? சாத்தியமா? அங்கே தான் நிற்கிறது தி.மு.கவின் விஞ்ஞான பூர்வ ஊழல் திறமை.
2 லட்சத்துக்கு மேல் காசோலைகளை தான் பயன்படுத்த வேண்டும். வீட்டில் அதிக கரன்சிகளை வைப்பது. குற்றம் வங்கியில் ரூ. 50,000 மேல் செலுத்த வருமான வரித்துறை கேள்வி கேட்கும். குவிந்திருக்கும் கருப்பு பணம் வெள்ளையாக வேண்டும் என்று சாமானிய மக்களுக்கு சொல்லுது சட்டம். ஆனால் அசோக்குமார் அடிச்சது ஒரே கல்லில் அஞ்சாறு மாங்காய்.
சாப்பிட்ட ஊருக்காரனும் ஹாப்பியில், சாப்பிட முடியாத கருப்பு பணமும் ஜோப்பியில். இதை இந்த விஞ்ஞானபூர்வ வித்தைகள் காட்டும் வித்தகத்தில், தலைமையையே விஞ்சும், கைதேர்ந்த திறமைசாலிகள் தி.மு.கவினர். இப்படித்தான் சமீபத்தில் தி.க தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு எடைக்கு எடை மக்கள் வழங்கும் கரன்சிகள் துலாபாரத்தில் வைக்கப்பட்டது. கரன்சிக்கு எதிர்முனையில் தலைவர் அமர்ந்த தராசை, ஒருவர் முட்டிக்காலால் முட்டுக் கொடுத்தது சமூக ஊடகத்தில் வைரல் ஆனது.
அதே பட காட்சியை மறுபடி பாருங்கள். வலது ஓரத்தில் ஒரு வெள்ளை நிற பிளாஸ்டிக் பையில் இருந்து ஒரு நபர் மேடைக்கு வரும் மக்களிடம், பணக்கட்டுகளை தருவார். தனக்கும் அந்த ரூபாய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை, என்ற முக பாவத்தில், பரிதாபமாக பலர் வந்து பல லட்சங்களை தராசில் கிடைத்துச் செல்லும் நகைச்சுவை காட்சியும் நடைபெற்றது. என் காசைத்தானே தருகிறார்கள் என்ற தோரணையில், பணத்தை அடுக்குபவர்களின் முகத்தைக் கூட நோக்காது. நன்றி பரிமாற்றம் கூட இல்லாமல் தராசில் அந்த தலைவர் அமர்ந்திருக்க அந்த தராசால், கருப்புகள் வெளுக்கப்பட்டது.
மக்களையும், அரசையும் முட்டாளாக நினைத்தும் இவர்களது கூட்டுக் கொள்ளைகள், இப்போதுதான் வெளிச்சப்படுகிறது. மக்களுக்கு புரியத் தொடங்கிவிட்டது. உண்மையான ஊழல் அற்ற தமிழகத்திற்கான விடியல் ஆட்சி, எப்போது வரும் என ஏக்கத்துடன், விருந்துகளையும், துலாபரத்தையும், மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.