முன்னாள் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மரணம்!! சோகத்தில் மூழ்கிய அரசியல் வட்டாரம்!!
The former Minister passed away
முன்னாள் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் உடல்நலக்குறைவால் காலமானார்.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் ஜார்ஜ் பெர்னான்டஸ். அதேபோல,வி.பி. சிங் அமைச்சரவையில் ரயில்வே அமைச்சராகவும் இருந்துள்ளார் ஜார்ஜ் பெர்னாண்டஸ். வயது முதிர்வு காரணமாக சமீப காலமாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். சமீப காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், ஜார்ஜ் பெர்னாண்டஸ் இன்று டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 88. அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.