தமிழக போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கொரோனா உறுதி!
Transport minister vijayabaskar affected by corona
உலகத்தையே ஆட்டிப்படைக்கும் கொரோனா தமிழகத்திலும் கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. ஆரம்பத்திலிருந்து அரசு, தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் ,என பல்வேறு தரப்பில் களத்தில் இறங்கி உதவி செய்து வருகின்றனர். இந்தநிலையில், களத்தில் பணியாற்றும் நபர்களுக்கு கொரோனா உறுதியாகி வந்தது. கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தநிலையில், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், அவரது மனைவி மற்றும் அவரது மகள் மூன்று பேரும் இன்று மாலை 6 மணி அளவில் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.