ட்ரெண்டிங்கில் #யார்_அந்த_SIR.. காரணம் என்ன?.. விபரம் உள்ளே.!
ட்ரெண்டிங்கில் #யார்_அந்த_SIR.. காரணம் என்ன?.. விபரம் உள்ளே.!
திமுக அரசுக்கு எதிராக அதிமுக நிர்வாகிகள் யார் அந்த சார்? என்ற ஹாஷ்டேக்கை ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.
சென்னை கிண்டி அண்ணா பல்கலையில், 19 வயது கல்லூரி மாணவி, தனது ஆண் நண்பருடன் தனிமையில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது, மர்ம நபர் வருகை தந்து, தனிமையில் இருந்த ஜோடியை வீடியோ எடுத்து மிரட்டி, பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த விஷயம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில், ஞானசேகரன் (37) என்ற பிரியாணி கடை உரிமையாளர், 15 வழக்குகள் நிலுவையில் இருக்கும் சரித்திர பதிவேடு குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
பாலியல் சித்ரவதை
அவரிடம் நடந்த விசாரணையில், டிப்ளமோ பயின்றுள்ள ஞானசேகரன், பாலியல் விவகாரங்களில் ஈடுபாடுகொண்டு மனைவியை பாலியல் சித்ரவதைக்கு உள்ளாக்கிய சம்பவமும் அம்பலமானது. அவரின் மீது பல்வேறு வழக்குகள் இருந்தபோதும், அரசியல் செல்வாக்கில் அதன்மீதான நடவடிக்கையை தள்ளிபோடவைத்ததாகவும் தெரியவருகிறது. இவ்வாறாக சர்ச்சை செயல்கள் தொடர்ந்துள்ளன.
அரசியல்கட்சிகள் போராட்டம்
இதனிடையே, மாணவி பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் செய்தியாக வெளியாகி மிகப்பெரிய அளவில் போராட்டத்தை முன்னெடுக்க காரணமாக அமைந்தது. அரசியல்கட்சி நிர்வாகிகள் பலரும் தங்களின் எதிர்ப்பை அரசுக்கு எதிராக முன்வைக்க, பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் தங்களின் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்தது. அண்ணாமலை தன்னை சாட்டையால் அடித்துக்கொண்டார். அதிமுக பல்கலை., வாசலில் போராட்டம் நடத்தியது. ஆளுநர் ஆர்.என் ரவி பல்கலைக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார்.
இதனிடையே, அரசுக்கு எதிராக தங்களின் எண்ணத்தை வெளிப்படுத்தும் பொருட்டு, அதிமுக தலைமை சார்பில் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் அரசுக்கு எதிரான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவை வைரலாகி வருகிறது.
திமுகவுக்கு எதிராக அதிமுகவின் போராட்டம் தொடரும் என அதிமுக தலைமை அறிவிப்பு
திமுக பவள விழாவில், ஞானசேகரன் கலந்துகொண்டதாக அதிமுக ஐடி விங் தலைவர் சத்யன் பதிவு
எப்.ஐ.ஆர்-ல் பதிவு செய்யப்பட்ட பெயர் வெளியே கசிந்த விவகாரத்தில், ஆளுங்கட்சிக்கு எதிராக குற்றச்சாட்டு
ஞானசேகரன் தொடர்பான காணொளி