சொன்னதை செய்த மோடிக்கு வாழ்த்துக்கள் - உதயநிதி ஸ்டாலின்!!
சொன்னதை செய்த மோடிக்கு வாழ்த்துக்கள் - உதயநிதி ஸ்டாலின்!!
எதிர்க்கட்சிகள் அவரது அணிக்கு 'INDIA' என்று பெயர் சூட்டியதை தொடர்ந்து, அதற்கு பதிலடி அளிக்கும் விதமாக பிஜேபி இந்தியா என்ற பெயரையே ஒதுக்கி வருகிறார்கள் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதற்கேற்ப, இன்று டெல்லியில் கோலாகலமாக தொடங்கப்பட்ட ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடியின் முன் வைக்கப்பட்டுள்ள பலகையில் இந்தியா என்பதற்கு பதிலாக 'பாரத்' என்ற பெயரிட்ட பலகை வைக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "இந்தியாவை மாற்றுவதாக சொன்ன மோடி, பாரத் என்று பெயர் பலகையில் மாற்றியுள்ளார்; சொன்னதை செய்த மோடிக்கு வாழ்த்துகள்" என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.