பெட்ரோல் விலையோடு போட்டி போடும் தக்காளி விலை..! உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.!!
பெட்ரோல் விலையோடு போட்டி போடும் தக்காளி விலை..! உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.!!
இந்தியாவில் பெய்து வரும் பருவ மழை காரணமாக பல மாநிலங்களில் காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்து வெளியேற்றம் ஏற்பட்டுள்ளது இதனால் கடந்த சில வாரங்களாக தக்காளியின் விலை உச்சத்திற்கு சென்றுள்ளது மேலும், அத்தியாவசிய பொருட்களும் விலை ஏற்றமடைந்துள்ளது.
இது குறித்து, திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில்:-
"விலைவாசி உயர்வு நாடெங்கும் மக்களை அச்சுறுத்துகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பெட்ரோல் விலையோடு போட்டிப்போடும் தக்காளி விலை, கியாஸ் விலையை நெருங்கும் வரை வேடிக்கை பார்க்காமல், ஒன்றிய அரசு உடனே தலையிட்டு உணவுப்பொருள் & இதர அத்தியாவசிய பொருட்களின் விலையைக் கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்", என்று அதில் தெரிவித்துள்ளார்.