உளுந்தூர்பேட்டையில் சைலெண்டாக காய் நகர்த்திய பாமக.. திமுக, அதிமுக உட்பட பிற கட்சிகளுக்கு ஷாக் செய்தி.!
உளுந்தூர்பேட்டையில் சைலெண்டாக காய் நகர்த்திய பாமக.. திமுக, அதிமுக உட்பட பிற கட்சிகளுக்கு ஷாக் செய்தி.!
தமிழகத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றாக இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி, கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து. இந்த தேர்தல் முடிவில் பாமக சார்பில் போட்டியிட்டோரில் கட்சியின் மூத்த தலைவர் ஜி.கே மணி உட்பட 5 பேர் சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
2024 பாராளுமன்ற தேர்தல், 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு என தனி வியூகம் அமைத்து களப்பணியை தொடங்கியுள்ள அக்கட்சியின் தலைமை அன்புமணியை தலைவராக தேர்வு செய்து, அடுத்தடுத்த தேர்தல்களுக்கு வளர்ச்சிப்பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், கட்சியில் இருந்து விலகிய பலரும் அக்கட்சியில் மீண்டும் இணைந்து தங்களின் பயணத்தை தொடங்கி வருகின்றனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாட்டம் உளுந்தூர்பேட்டையில் கள்ளக்குறிச்சி மாவட்ட கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜா தலைமையில், முன்னாள் மாவட்ட செயலாளர் பன்னீர், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் ஜெகன் தலைமையில், முன்னணி பொறுப்பாளர்கள் சத்யா வழக்கறிஞர், மாற்றுக்கட்சியில் 300 பேர்கள் கைகோர்த்து ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணி அளவில் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து அணிவகுத்துச் செல்ல இருக்கின்றனர்.