×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளோட மதிப்பு எவ்வளவு தெரியுமா?!.. கேட்டா வாயடைச்சு போயிடுவீங்க..!

அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளோட மதிப்பு எவ்வளவு தெரியுமா?!.. கேட்டா வாயடைச்சு போயொடுவீங்க..!

Advertisement

நாமக்கல் மாவட்டம், நாமக்கல் அ.தி.மு.க  சட்டமன்ற உறுப்பினர்  கே.பி.பி.பாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையொட்டி நாமக்கல் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு  வழக்கு பதிவு செய்து அவருக்கு சொந்தமான இடங்கள், அவரது உறவினர்கள், நெருங்கிய தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட நபர்களின் இருப்பிடம் உட்பட மொத்தம் 26 இடங்களில்  ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அதிகாரிகள் நேற்று  சோதனை நடத்தினர். நேற்று காலை தொடங்கிய சோதனை மாலை 6.30 மணிக்கு நிறைவடைந்தது.

இந்த சோதனையின் போது அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.72 கோடி மதிப்புடைய சொத்துகளை சேர்த்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இது அவரதுவருமானத்தை விட 315% அதிகமாகும்.

இந்த நிலையில் அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் தொடர்புடைய பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில், 1.6 கிலோ தங்கம், 6.6 கிலோ வெள்ளி, ரூ. 14.96 லட்சம் ரொக்கம், மற்றும் சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 20 லட்சம் ரூபாய் வரை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ததற்கான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#property seized #Corruption Prevention and Vigilance Division #raid #AIADMK #former MLA #KBP Baskar
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story