விசிக மாநாட்டில் பங்கேற்கும் அதிமுக.?! அரசியலில் பரபரப்பை கிளப்பும் நிகழ்வு.!
விசிக மாநாட்டில் பங்கேற்கும் அதிமுக.?! அரசியலில் பரபரப்பை கிளப்பும் நிகழ்வு.!
மது ஒழிப்பு மாநாடு
வரும் அக்டோபர் 2ம் தேதி கள்ளக்குறிச்சியில் விடுதலை சிறுத்தை கட்சியின் மது ஒழிப்பு மாநாடு நடக்க உள்ளது. இதற்காக விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தீவிர ஏற்பாடு செய்து வருகின்றனர். இந்த நிலையில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் அந்த மாநாட்டிற்கு அதிமுகவை அழைத்துள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன், "விசிக நடத்துகின்ற மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுகவும் கலந்து கொள்ளலாம். மக்களின் பிரச்சினைக்காக சாதிவெறி, மதவெறி சக்திகளை தவிர மற்ற எந்த கட்சிகளோடும் இணைந்து செயல்பட நாங்கள் தயார்.
இதையும் படிங்க: கோட் பட தலைப்பில் சனாதனம்? அதிர்ச்சியை தந்த விசிக எம்.பி.. பரபரப்பு விளக்கம்.!
அதிமுகவுக்கு அழைப்பு
தமிழகத்தில் இருக்கும் மது கடைகளை அரசு மூடுவதற்கு முன் வர வேண்டும்." என்று தெரிவித்து இருக்கிறார். திமுக கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் விடுதலை சிறுத்தை கட்சி திமுக அரசுக்கு எதிரான போராட்டமாக நடத்துகின்ற இந்த மாநாட்டில் பங்கேற்க அதிமுகவை அழைத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
ஒருவேளை அடுத்து வரும் தேர்தல்களில் திருமாவளவன் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கான ஓர் மறைமுக அறிவிப்பு தானா இது? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.