ஒரே கையெழுத்து, 9 மாதத்தில் மக்களுக்கு தித்திப்பு செய்தி; துரைமுருகனின் மகனாய் வாக்குறுதியை கர்ஜித்த கதிர் ஆனந்த்.!
ஒரே கையெழுத்து, 9 மாதத்தில் மக்களுக்கு தித்திப்பு செய்தி; துரைமுருகனின் மகனாய் வாக்குறுதியை கர்ஜித்த கதிர் ஆனந்த்.!
தொகுதி மக்களின் நலனுக்காக, அவர்கள் கோரிக்கை 9 மாதத்தில் பணிகள் நிறைவுபெற்று முடிக்கப்படும் என கதிர் ஆனந்த் வாக்குறுதி அளித்தார்.
2024 மக்களவை பொதுத்தேர்தலில், திமுக சார்பில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், மீண்டும் நாடாளுமன்ற வேட்பாளராக களமிறங்கி இருக்கிறார். அவருக்கு செல்லும் இடமெல்லாம் மக்கள் தொடர்ந்து தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அவரை எதிர்த்து போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாஜக வேட்பாளர் ஏ.சி சண்முகமும் தீவிர களப்பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், குடியாத்தம், அகரம்சேரி பகுதியில் தேர்தல் பரப்புரை பிரச்சாரம் மேற்கொண்ட திமுக நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கதிர் ஆனந்த், தொகுதி மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் போர்க்கால அடிப்படையில் விரைந்து நிறைவேற்றப்படும் என்று கூறினார். மேலும், அகரம் பகுதியில் பாலம் 9 மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என கூறினார்.
இதுகுறித்து கதிர் ஆனந்த் பேசுகையில், "இந்த தேர்தல் மகளிருக்கான தேர்தல். விலைவாசியை குறைக்கும் தேர்தல், இதனை விட்டுவிட்டால் விலைவாசி குறையாது, யாராலும் நாட்டை காப்பாற்ற இயலாது. அதனால் நீங்கள் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும். நீண்ட நாட்களாக அகரசேரி பகுதியில் மேம்பாலம் அமைக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
நான் இப்போது உங்களுக்கு வாக்குறுதி அளிக்கிறேன். ஆறு மாதத்திற்குள் அடிக்கல் நாட்டி, 9 மாதத்திற்குள் அதனை கட்டிமுடிப்பேன். இதனை துரைமுருகனின் மகனாக வாக்குறுதி அளிக்கிறேன்" என பேசினார்.