#Breaking: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைந்தார்.. கண்ணீரில் தொண்டர்கள்.!!
#Breaking: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைந்தார்.. கண்ணீரில் தொண்டர்கள்.!!
தேமுதிக தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் நேற்று உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.
அங்கு விஜயகாந்த் அவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்ததை தொடர்ந்து, அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
கடந்த இரண்டு நாட்களாகவே அவர் சளி மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டவருக்கு மேற்கொண்ட சோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
மேலும் மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் தனது 71 வயதில் உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தியுள்ளார்.