நாளை கட்சி தொண்டர்களை சந்திக்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்!!
நாளை கட்சி தொண்டர்களை சந்திக்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்!!
நாளை தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாள். இவரது பிறந்தநாளை அவரது கட்சி தொண்டர்கள் பல்வேறு விதத்தில் பல்வேறு இடங்களில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை நடத்தி வருகின்றனர்.
மேலும் இவரது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக தேமுதிக கட்சி சார்பாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் நாளை தேமுதிக தொண்டர்களை அக்கட்சியின் தலைவரான விஜயகாந்த் சந்திக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனால் சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள தேமுதிக கட்சியின் தலைமை அலுவலகத்தில் நாளை கட்சி தொண்டர்களை கேப்டன் விஜயகாந்த் சந்திக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கட்சித் தொண்டர்கள் அனைவரும் தலைவர் விஜயகாந்தை சந்திப்பதற்காக ஆவலுடன் பல ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.