இனி ஐபிஎல் தொடரில் புதிய மாற்றம்.! பிசிசிஐ ஒப்புதல்.! உச்சகட்ட குஷியில் கிரிக்கெட் ரசிகர்கள்.!
2020 சீசனில் ஐபிஎல் கிரிக்கெட்டில் மேலும் இரண்டு அணிகளை சேர்க்க இந்திய கிரிக்கெட் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
கிரிக்கெட்டில் T20 போட்டிகள் ஆரம்பித்த பிறகு, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு ரசிகர்களின் ஆதரவு குறைந்துள்ளது. அதிலும் ஐபில் கிரிக்கெட் போட்டிகளுக்கு இருக்கும் ரசிகர்கள் மிகவும் அதிகமாகி கொண்டு இருக்கிறது. ஐபிஎல் போட்டிக்கு ரசிகர்களின் வரவேற்பை கருத்தில் கொண்டு, ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் 8 அணிகளுடன் மேலும் இரண்டு அணிகளை சேர்ப்பதற்கான கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்தநிலையில் இன்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் முக்கிய அம்சமாக இந்தக் கோரிக்கை கவனத்தில் கொண்டு வரப்பட்டு விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் மேலும் இரண்டு அணிகளை சேர்க்க இந்திய கிரிக்கெட் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து 10 அணிகள் 2022 சீசனில் இருந்து நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வீரர்களை போட்டிக்கு தயார்படுத்துவது, புதிய அணிகளை டெண்டர் மூலம் முடிவு செய்தல், வீரர்கள் ஏலம் ஆகியவற்றுக்கு போதிய கால அவகாசம் இல்லாததால் வரும் 2021-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளில் இந்தக் கோரிக்கையை நடைமுறைப்படுத்த வாய்ப்பு இல்லாததால் 2022 ஆம் ஆண்டே 10 அணிகள் அணி ஐபிஎல்-ல் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.