நேற்றைய போட்டியின் அதிரடி ஆட்டத்தால் ஐ.பி.எல். போட்டிகளில் புதிய சாதனை படைத்த ஏபிடி வில்லியர்ஸ்.!
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரின் 22வது லீக் ஆ
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரின் 22வது லீக் ஆட்டம் நேற்று குஜாராத் மாநிலம் அலகாபாத்தில் நடைபெற்றது. அதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதியது. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஏபி டிவில்லியர்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 3 பவுண்டரிகள், 5 சிக்சர்கள்அடித்து 75 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். டெல்லி அணி இறுதியில் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்களை மட்டுமே எடுத்தது. பெங்களூரு அணி 1 வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
நேற்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணியின் அதிரடி வீரர் ஏபி டி வில்லியர்ஸ் புதிய சாதனை படைத்து உள்ளார். அவர் ஐ.பி.எல். போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களை கடந்த 2வது வெளிநாட்டு வீரர் என்ற வரலாறை படைத்திருக்கிறார். 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வெளிநாட்டு வீரராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் உள்ளார். பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி 6,041 ரன்களுடன் ஐ.பி.எல். போட்டிகளில் அதிக ரன்களை எடுத்த வீரராக உள்ளார். இவரை தொடர்ந்து சுரேஷ் ரெய்னா (5,472) உள்ளார். இதுதவிர, ஐ.பி.எல்.லில் 5 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்களாக இந்தியாவின் ஷிகர் தவான் மற்றும் ரோகித் சர்மா உள்ளனர்.