மீண்டும் ஆர்.சி.பி அணியில் ஏ.பி.டிவில்லியர்ஸ்.! யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.! உச்சகட்ட குஷியில் ரசிகர்கள்.!
மீண்டும் ஆர்.சி.பி அணியில் ஏ.பி.டிவில்லியர்ஸ்.! யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.! உச்சகட்ட குஷியில் ரசிகர்கள்.!
2022 ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 26ம் தேதி தொடங்கி மே 29ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இதற்காக அனைத்து அணிகளும் பணிகளை தொடங்கிவிட்ட நிலையில் ஆர்சிபி மட்டும் இன்னும் கேப்டன் யார் என்பதை அறிவிக்கவில்லை.
இந்நிலையில் ஏபி டி வில்லியர்ஸை மீண்டும் அணிக்குள் கொண்டு வரவேண்டும் என கோலி கோரியுள்ளார். ஐபிஎல் 2021க்குப் பிறகு தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டனும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் விக்கெட் கீப்பருமான ஏபி டி வில்லியர்ஸ் அனைத்து வகையான ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
அதாவது விராட் கோலியிடம் அணியின் புதிய வடிவம் குறித்து நடத்தப்பட்ட ஆலோசனையில், டிவ்லியர்ஸை மீண்டும் அணிக்குள் கொண்டு வரவேண்டும் எனவும், ஆர்சிபியை பற்றி நன்கு தெரிந்த ஒரு நபர் அணியின் ஆலோசகராக அல்லது பேட்டிங் பயிற்சியாளராக வந்தால் பெரும் உதவியாக இருக்கும் எனக்கேட்டுள்ளார்.
இந்தநிலையில் வரும் சனிக்கிழமை (மார்ச் 12) ஒரு நிகழ்வில், ஆர்சிபி புதிய கேப்டனை அறிவிக்கப் போவது மட்டுமல்லாமல், டி ல்லியர்ஸை ஒரு 'ஆலோசகராக' வெளிப்படுத்த வாய்ப்புள்ளது என தெரிகிறது. ஏ.பி.டிவில்லியர்ஸ் அணியின் மெண்ட்டாராக வந்த பிறகாவது ஆர்சிபி அணி கோப்பையை தட்டி தூக்குமா என ரசிகர்களிடத்தில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.