அசத்தலான ஹாட்ரிக் சாதனை! ஆஸ்திரேலியாவிடம் தென்னாப்பிரிக்கா படுதோல்வி
Ashton agar hat trick against South Africa
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது. இதன் முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. ஸ்மித் 45, பின்ச் 42 ரன்கள் அடித்தனர்.
தொடர்ந்து பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி ஆரம்பம் முதலே ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. 14.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தென்னாப்பிரிக்கா அணி வெறும் 89 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வியை சந்தித்தது.
டி20 கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்கா அணி எடுத்த மிக்குறைந்த ரன் இது தான். 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆஸ்திரேலியா அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்டோன் அகார் 8 ஆவது ஓவரின் கடைசி 3 பந்துகளில் டூப்ளஸிஸ், பெலுக்வயோ மற்றும் ஸ்டெயின் விக்கெட்டுகளை கைப்பற்றி ஹாட்ரிக் சாதனை படைத்தார்.