ICC சாம்பியன்ஸ் ட்ரோபியில் பாகிஸ்தானிடம் அடைந்த படுதோல்விக்கு பதிலடி கொடுக்குமா இந்திய அணி.
asia-cup-2018- india vs pakistan oru kannottam
2017 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்த இந்திய அணி இன்றைய போட்டியில் அதற்கு தகுந்த பதிலடி கொடுக்குமா?
ஆம், 2017 ஆம் ஆண்டு icc champions trophy இறுதி போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் நேருக்கு நேர் மோதியது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 338 ரன்களை குவித்தது. இந்திய அணிக்கு 339 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆனால் அதை எதிர்த்து ஆடிய இந்திய அணி 158 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது.
அதன்பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் இரு நாடுகளுக்கு இடையே உள்ள பிரச்சனைகள் காரணமாக இதுவரை எந்த போட்டியிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 15ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்சில் துவங்கி இதுவரை நான்கு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகும் எதிர்பார்க்கும் இந்தியா பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டி இன்று மாலை நடைபெற உள்ளது.
கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இன்றய போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.
ஷிகர் தவான்;
இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் கடுமையாக சொதப்பிய ஷிகர் தவான், ஹாங்காங் அணியுடனான போட்டியில் சதம் அடித்து மீண்டும் தனது பார்மிற்கு திரும்பியுள்ளார். இவரே இன்றைய போட்டியிலும் இந்திய அணிக்கு துவக்கம் கொடுப்பார்.
பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டிக்கு ஆடும் லெவனில் உள்ள 11 பேர் கொண்ட இந்திய அணி.
ரோகித் சர்மா(கேப்டன்), ஷிகர் தவான், அம்பட்டி ராயுடு, மனிஷ் பாண்டே, கேதார் ஜாதவ், மகேந்திர சிங்டோனி,ஹர்டிக் பாண்டியா, ஷஹால், குலதீப் யாதவ், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரீத் பூம்ரா.