ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் திடீர் மாற்றம்.. தொடர் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி..!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் திடீர் மாற்றம்.. தொடர் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி..!
ஆசியா கண்டத்தைச் சேர்ந்த 6 அணிகள் பங்குபெறும் ஆசியக் கோப்பை டி-20 கிரிக்கெட் தொடர் வருகின்ற ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 ஆம் தேதி வரை இலங்கையில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் அசாதாரண அரசியல் சூழ்நிலைகளால் இந்தத் தொடரை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
ஆனால் சமீபத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடர் மற்றும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் தொடர் ஆகியவை எந்த ஒரு தடையும் இல்லாமல் நடைபெறுவதால் ஆசிய கோப்பையையும் திறம்பட நடத்த முடியும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் நம்பிக்கையில் இருந்தது. ஆனால் அந்நாட்டின் நிலைமை நாளுக்கு நாள் நலிவடைந்து வரும் நிலையில் தற்போது ஆசிய கோப்பை தொடர் பற்றி புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஏற்கனவே குறிப்பிட்டுள்ள அதே தேதிகளில் ஆசியக் கோப்பை தொடரினை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்திட ஆசியா கிரிக்கெட் கமிட்டி ஆனது முடிவு செய்துள்ளது. இருப்பினும் இந்தப் தொடரினை நடத்தும் முழு பொறுப்பும் இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கே அளிக்கப்பட்டுள்ளது.