பயிற்சியாளர் அப்பவே சொன்னார்.. அதை செய்துகாட்டிய ஆஸ்திரேலிய வீரர்கள்.! ஆஸி எப்பவுமே மரண மாஸே.!
பயிற்சியாளர் அப்பவே சொன்னார்.. அதை செய்துகாட்டிய ஆஸ்திரேலிய வீரர்கள்.! ஆஸி எப்பவுமே மரண மாஸே.!
7 வது T20 உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி இன்று துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச், பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 48 பந்துகளுக்கு 85 ரன்கள் எடுத்திருந்தார்.
இதனையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி 19.1 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்து அபார வெற்றிபெற்று T20 உலக கோப்பையை கைப்பற்றியது. ஆஸ்திரேலிய அணி அதிகபட்சமாக மார்ஸ் 77 ரன்கள் எடுத்திருந்தார்.
சமீபத்தில் பேசிய ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், இறுதிப்போட்டியில் டாஸ் பற்றி கவலைப்படாமல் அச்சமின்றி விளையாடுவோம். இறுதிப் போட்டியில் டாஸ் போன்ற காரணங்களை பொருட்படுத்தாமல் வெற்றி பெறும் மனநிலையுடன் ஆஸ்திரேலியா அணி தயாராக உள்ளது. முதலில் பேட்டிங் செய்தாலும் சரி அல்லது முதலில் பந்துவீசினாலும் சரி, எந்த சூழ்நிலையிலிருந்தும் வெல்ல முடியும் என்ற மனநிலை எங்களுக்கு உள்ளது என தெரிவித்திருந்தார். அவர் சொல்லியது போலவே ஆஸ்திரேலிய வீரர்கள் செய்துகாட்டியுள்ளனர்.