உலகக் கோப்பை சாதனைப் பட்டியலில் இடம் பிடித்த இலங்கை இளம் வீரர்!
Avishka Fernando becimes 3rd youngest centurion in wc
இன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் உலகக்கோப்பை போட்டியில் இலங்கையை சேர்ந்த 21 வயது இளம்வீரர் அவிஸ்கா பெர்னான்டோ சதமடித்து அசத்தினார்.
உலக கோப்பை தொடரின் 39வது போட்டியில் இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இலங்கை அணியின் துவக்க ஆட்டக்காரர் கருணாரத்னே 16வது ஓவரில் ஆட்டமிழக்க மூன்றாவது வீரராக களமிறங்கினார் 21 வயதான அவிஸ்கா பெர்ணான்டோ. இவர் இதுவரை ஒன்பது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். இந்தப் போட்டிக்கு முன்பாக ஒரே ஒரு அரை சதம் மட்டும் அடித்திருந்தார்.
இந்நிலையில் இன்றைய போட்டியில் சிறப்பாக ஆடிய மயங்க் அகர்வால் சர்வதேச ஒருநாள் அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இந்த உலக கோப்பை தொடரில் இலங்கை அணியின் சார்பாக அடிக்கப்பட்ட முதல் சதம் இதுதான். அதோடு மட்டுமல்லாமல் இலங்கை அணிக்காக உலக கோப்பை தொடர்களில் குறைந்த வயதில் சதம் அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
மேலும் சர்வதேச அரங்கில் உலகக் கோப்பை தொடரில் குறைந்த வயதில் சதம் அடித்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார் பெர்னாண்டோ. இன்றைய நிலவரப்படி அவரது வயது 21 ஆண்டுகள் 87 நாட்கள்.
இந்தப் பட்டியலில் அயர்லாந்தைச் சேர்ந்த பால் ஸ்டர்லிங்(20 வயது 196 நாட்கள்) முதல் இடத்திலும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்(21 வயது 76 நாட்கள்) இரண்டாவது இடத்திலும் உள்ளனர். நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் இந்திய அணியின் விராட் கோலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் உள்ளனர்.