பென் ஸ்டோக்ஸ் இன் ஓய்விற்கு இதுதான் காரணமா? மைக்கேல் வாகன் காட்டமான பதிவு
பென் ஸ்டோக்ஸ் இன் ஓய்விற்கு இதுதான் காரணமா? மைக்கேல் வாகன் காட்டமான பதிவு
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலும் முக்கிய ஆல்-ரவுண்டராக இருந்து வந்த பென் ஸ்டோக்ஸ் திடீரென சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இன்று நடைபெறும் ஒருநாள் போட்டி தான் அவருடைய கடைசி போட்டியாகும்.
2019ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி உலக கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றியவர் பென் ஸ்டோக்ஸ். 31 வயது ஆகும் இவர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அடுத்தடுத்து நடைபெறும் கிரிக்கெட் தொடர்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள முடியாது என்பதை காரணமாக கூறியே அவர் இந்த ஓய்வினை அறிவித்துள்ளார்.
பென் ஸ்டோக்ஸ் இன் இந்த முடிவிற்கு பல நாடுகளில் நடத்தப்படும் பேண்டஸி லீட் தொடர்கள் தான் காரணம் என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அடுத்தடுத்த ஃபேண்டசி லீக் தொடர்கள் மற்றும் இரு அணிகளுக்கு இடையேயான சர்வதேச தொடர்கள் தொடர்ந்து நடைபெறுவதால் வீரர்களுக்கு ஓய்வு கிடைப்பதில்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து கிரிக்கெட் போர்டுகளும் பேண்டசி லீக் நடத்துவதை முக்கிய குறிக்கோளாக கொண்டிருந்தாள் இரு அணிகளுக்கு இடையேயான சர்வதேச தொடர்களை கைவிடுவதே நல்லது என கூறியுள்ளார். இதற்காக 31 வயதிலேயே ஒரு வீரர் ஓய்வு பெறுவது ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் பதிவிட்டுள்ளார்.