எல்லைக் கோட்டை கவனிக்கத் தவறியதால் கையை விட்டு போன உலகக் கோப்பையை! நியூசிலாந்து அணியின் பரிதாபம்
bolt made big mistake in justifying the boundary line
கடந்த மே மாதம் 30ஆம் தேதி இங்கிலாந்தில் துவங்கிய உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி சூப்பர் ஓவர் முடிந்தும் அதிகமான பவுண்டரிகள் அடித்த அணி என்ற அடிப்படையில் உலக கோப்பையை வென்றது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அந்த அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ்.
இந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியும் 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் அடித்தது. 2019 உலகக்கோப்பை இறுதிப்போட்டி டையில் முடிந்ததால் சூப்பர் ஓவர் அறிவிக்கப்பட்டது. பின்னர் சூப்பர் ஓவரும் டையில் முடிந்ததால் அதிக பவுண்டரிகள் அடித்ததன் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
நியூசிலாந்து அணியிடம் இருந்த ஆட்டத்தை இப்படி சூப்பர் ஓவர் வரை கொண்டுவந்து நிறுத்திய ஒரே நபர் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இவர் தனது அணிக்காக போராடினார். அதேசமயம் ஸ்டோக்ஸ் அளித்த அருமையான வாய்ப்பை தவறவிட்டார் நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் போல்ட். அந்த ஒரு தவறை மட்டும் போல்ட் செய்யாமல் இருந்திருந்தால் சூப்பர் ஓவர் வரை செல்லாமலே நியூசிலாந்து அணி கோப்பையை கைப்பற்றி இருக்கலாம்.
49 ஆவது ஓவரின் நான்காவது பந்தில் இங்கிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய பென் ஸ்டோக்ஸ் தூக்கி அடித்த பந்தை எல்லைக்கோட்டில் கேட்ச் பிடித்தார் போல்ட். ஆனால் எல்லை கோடு அருகில் இருந்ததை உணராமல் போல்ட் எல்லைக்கோட்டின் மீது காலை வைத்ததால் சிக்ஸராக மாறியது. அப்போது மட்டும் ஸ்டோக்ஸ் விக்கெட்டை கைப்பற்றி இருந்தால் நியூசிலாந்து அணி நிச்சயம் உலக கோப்பையை வென்று இருக்கலாம்.