டயப்பர் அணியும் வயதிலேயே பிரபல கிரிக்கெட் நட்சத்திரங்களை கவர்ந்த சிறுவன்! வைரலாகும் வீடியோ
Boy with diaper plays straight and cover drives
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன் பகிர்ந்துள்ள ஒரு சிறுவனின் வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் சிறுவன் ஒருவன் டயப்பர் அணிந்துகொண்டு கையில் பிளாஸ்டிக் பேட்டுடன் கிரிக்கெட் விளையாடுகிறான். அவன் ஸ்ட்ரைட் ட்ரைவ், கவர் ட்ரைவ் என பிரபல கிரிக்கெட் வீரர்கள் ஆடுவது போலவே மிகச்சிறப்பாக ஸ்டைலாக பந்தினை அடிக்கிறான்.
கடந்த நவம்பர் மாதமே சமூக வலைத்தளங்களில் பரவிய இந்த வீடியோவை மைக்கேல் வாகன் பீட்டர்சனுக்கு அனுப்பியுள்ளார். பீட்டர்சன் அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இநீதிய அணியின் கேப்டன் விராட் கோலியிடம் "இந்த நிலையில் சிறுவனை உங்கள் அணியில் சேர்த்துகொள்வீர்களா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள விராட் கோலி, "நம்பவே முடியவில்லை; இந்த பையன் எந்த ஊர்?" என கேட்டுள்ளார். மேலும் டூப்ளஸிஸ், காலிஸ் ஆகியோரும் சிறுவனை வெகுவாக பாராட்டியுள்ளனர்.