பும்ராவிற்கு காயம்; மீண்டும் பந்துவீசவாரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
bumra injury while feelding
இன்று பங்களாதேஷிற்கு எதிராக நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய முன்னணி வேகப்பந்துவீச்சாளர் பும்ராவிற்கு பீல்டிங் செய்யும்பொழுது காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவருடன் வெளியில் சென்றுவிட்டார்.
இன்று நடைபெற்று வரும் நாற்பதாவது உலக கோப்பை லீக் போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணியில் ரோகித் சர்மா இந்த உலக கோப்பை தொடரில் தனது நான்காவது சதத்தை விளாசினார். மேலும் இந்த உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது காயம் காரணமாக இடையிலேயே வெளியேறிய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் இன்று மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
தற்பொழுது பங்களாதேஷ் அணி தனது இரண்டாவது இன்னிங்சை ஆடி வருகிறது. ஹர்டிக் பாண்டிய வீசிய 36ஆவது ஓவரில் சபீர் ரஹ்மான் அடித்த பந்து லெக் சைடில் எல்லைக்கோட்டிற்கு சென்றது. அங்கு பீல்டிங் செய்து கொண்டிருந்த வேகப்பந்துவீச்சாளர் பும்ரா ஓடி வந்து பந்தை தடுக்க முயன்றார். அப்போது கீழே விழுந்த அவருக்கு காயம் ஏற்பட்டது. சிறிது நேரம் எல்லை கூட்டிலேயே படுத்திருந்த பும்ராவை இந்திய அணியின் மருத்துவர் வெளியில் அழைத்துச் சென்றுள்ளார்.
ஏற்கனவே ஷிகர் தவான், விஜய் சங்கர் ஆகியோர் காயம் காரணமாக வெளியேறியதால் இந்திய அணி சற்று பலம் குறைந்தே உள்ளது. இந்நிலையில் நம்பர் ஒன் பவுலர் பும்ராவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நல்ல வேலை 39 ஓவரிலேயே பும்ரா மீண்டும் பீல்டிங் செய்ய வந்துவிட்டார்.