பட்லருக்கு இது முதல்முறை அல்ல! அஸ்வினுக்கு முன்னாலே பட்லருக்கு ஆப்பு வைத்த வீடியோ
Butler's first mankad out on 2016
கடந்த திங்கட்கிழமை ஜெய்ப்பூரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே ஐபிஎல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இரண்டாவதாக பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியின் பட்லர் சிறப்பாக ஆடி 78 ரன்கள் எடுத்தார். ஆனால் அவர் அவுட்டாகிய விதம் பல்வேறு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பந்து வீசுவதற்கு முன்னரே கிரீஸை விட்டு வெளியே வந்த பட்லரை பந்து வீச வந்த அஸ்வின் பந்தை ஸ்டம்பில் அடித்து விக்கெட்டுக்காக முறையிட்டார். சட்டத்திற்கு இதற்கான இடம் இருப்பதால் அம்பயரும் அவுட் கொடுக்க பட்லர் வெளியேறினார். இதற்கு மன்கட் முறை என்பது பெயர்.
அஸ்வின் இந்த மாதிரியாக பட்லரை அவுட் செய்தது பலருக்கு பிடிக்கவில்லை. அஸ்வின் ஆட்டத்தின் நாகரீகத்தை கடைபிடிக்கவில்லை என்றும், குறுக்கு வழியில் விக்கெட் எடுத்துவிட்டார் என்றும் பலரும் அஸ்வினை வசைபாடி வருகின்றனர்.
ஆனால் ஏற்கனவே 2016 ஆம் இதேபோன்று அவுட்டாகிய பட்லர், அப்போது இது பேட்ஸ்மேன் தவறு தான் என ஒப்புக்கொண்டுள்ளார். அன்று இலங்கை அணியின் சேனநேயகா செய்ததை சரியென ஒப்புக்கொண்ட பட்லர் இப்போது மட்டும் அஸ்வினை விமர்சிப்பது ஏன்.
2016 ஆம் இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் சேனநேயகா பட்லரை அதே ஆட்டத்தில் ஒரு முறை எச்சரித்துள்ளார். ஆனால் மீண்டும் பட்லர் அதேபோன்று கிறீஸை விட்டு வெளியேறவே, அஸ்வினைப் போன்றே அவரும் பந்தை ஸ்டம்பில் அடித்துவிட்டு விக்கெட்டுக்காக முறையிட்டார். அம்பயரும் அவுட் கொடுக்கவே பட்லர் அமைதியாக வெளியேறுகிறார். இதோ அந்த வீடியோ உங்களுக்காக: