சாஹலின் சுழற்சியில் சுருண்ட கொல்கத்தா அணி.! வெற்றிக்கு காரணமே அந்த ஒரு ஓவர் தான்.! அனல்பறக்கும் வீடியோ.!
சாஹலின் சுழற்சியில் சுருண்ட கொல்கத்தா அணி.! வெற்றிக்கு காரணமே அந்த ஒரு ஓவர் தான்.! அனல்பறக்கும் வீடியோ.!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 30-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியும், கொல்கத்தா அணியும் மோதியது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக பட்லர் சதம் அடித்தார். இதனையடுத்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. இறுதி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 3 ரன்கள் மட்டுமே அடித்தநிலையில் கொல்கத்தா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து ராஜஸ்தான் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் அணியின் இந்த வெற்றிக்கு சதமடித்த ஜோஸ் பட்லர் முக்கிய காரணம் என்றாலும், அவரின் உழைப்பு வீணாகி வெற்றி பறிபோகி விடக்கூடும் என்ற இக்கட்டான நிலைமையில் முக்கிய வீரர்களின் விக்கெட்களை ஒரே ஓவரில் அடுத்தடுத்து தட்டி தூக்கிய யுஸ்வேந்திர சாஹல் அசத்தியுள்ளார்.
நேற்றைய ஆட்டத்தில் ஹட்-ட்ரிக் விக்கெட் எடுத்து மிரட்டியதுடன் ஒரே ஓவரில் நான்கு விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையையம் யுஸ்வேந்திர சாஹல் பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி இந்த போட்டியில் மட்டும் 5 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்றுள்ளார்.