சென்னை என்றாலே கெத்துதான்! இரண்டாவது முறை சாம்பியன் பட்டத்தை வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ்!
chepauk Super Gillies won the championship title for the second time
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர்கள் களமிறங்கி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் எடுத்தது. கடைசியில் முருகன் அஸ்வின் 28 ரன்னுடன் களத்தில் இருந்தார்.
திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் ஜெ.கவுசிக் மற்றும் அபினவ் 2 விக்கெட்டுகளும், ரோகித் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனையடுத்து, 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி களமிறங்கியது.
இறுதியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசியில் பிரணேஷ் மற்றும் சிலம்பரசன் 1 ரன்னுடன் களத்தில் இருந்தனர். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் சிறப்பாக பந்து வீசிய பெரியசாமி 5 விக்கெட்டுகளைஎடுத்தார். அலெக்சாண்டர் 2 விக்கெட்டுகளும், ஹரிஷ்குமார் மற்றும் விஜய் சங்கர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனால் சென்னை ரசிகர்கள் குஷியாக உள்ளனர்.