ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கிறிஸ் கெயில்.! என்ன காரணம் தெரியுமா.?
நான் சதம் அடிக்க வேண்டும் என விரும்பியவர்களை ஏமாற்றியதற்கு என்னை மன்னிக்கவும்.
நேற்று நடைபெற்ற 50 ஆவது ஐபிஎல் டி20 போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவிற்கு 4 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கிறிஸ் கெயில் 63 பந்துகளுக்கு 99 ரன்கள் எடுத்த நிலையில் ஆர்ச்சர் ஓவரில் அவுட் ஆனார். சதத்தை தவறவிட்ட கெயில் கடுப்பில் பேட்டை தூக்கி வீசினார். கெய்லின் இந்த ஆக்ரோஷம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஐபிஎல் விதிமுறையை மீறி கெய்ல் இவ்வாறு செய்ததை கண்டித்து நேற்றை ஆட்டத்தில் அவரது சம்பளத்தில் 10 சதவிகிதத்தை அபராதமாக விதித்துள்ளது ஐபிஎல் நிர்வாகம்.
நேற்றைய ஆட்டம் முடிந்த பிறகு பேசிய கெயில், 99 ரன்களில் அவுட் ஆனது துரதிர்ஷ்டவசமானது. ஆனால் இறுதி வரை கிரீஸில் நின்று விளையாடியது மகிழ்ச்சி தான். நான் சதம் அடிக்க வேண்டும் என விரும்பியவர்களை ஏமாற்றியதற்கு என்னை மன்னிக்கவும். நான் இன்று அதை மிஸ் செய்து விட்டேன். இருந்தாலும் என் மனதில் அதனை சதமாகவே பார்க்கிறேன் என கெயில் கூறினார்.