நேற்றைய ஆட்டத்தில் தோற்றாலும், தல தோனியை புகழ்ந்து தள்ளும் பிரபலங்கள்!
cinema actors talk about MS Dhoni
ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறு விறுப்பாக நடந்துவருகிறது. 39 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி இரண்டாவது இடத்தில் உள்ளது.
நேற்று நடந்த 39 வது போட்டியில் பெங்களூர் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதியது. ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன் எடுத்துது. அதிகபட்சமாக பெங்களூர் அணியின் சார்பாக பார்திவ் படேல் 37 பந்துகளில் 53 ரன் எடுத்தார்.
162 என்ற சற்று எளிதான இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தது சென்னை அணிக்கு சற்று சோகத்தை ஏற்படுத்தியது. தல தோனியின் நிதானமான ஆட்டம் சென்னை அணியை வெற்றிக்கு அருகில் கொன்று சென்றது.
ஆட்டத்தின் இறுதி ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற 26 ரன்கள் தேவை என்ற நிலையில் தோனி 3 சிக்ஸ், 1 பவுண்டரி மற்றும் 2 ரன்கள் என 5 பந்தில் 24 ரன்கள் குவித்தார்.
கடைசியில் ஒரு பந்துக்கு இரண்டு ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கடைசி பந்தை சாமர்த்தியமாக வீசிய உமேஷ் யாதவ் பந்தினை தோனியால் தொட முடியாமல், கீப்பரிடம் செல்வதற்குள் ஒரு ஓட்டம் எடுக்க முயற்சித்தபோது தாகூர் ரன் அவுட் ஆனதால் சென்னை அணி தோல்வியை சந்தித்தது.
கடைசி வரை போராடிய தோனி பற்றி பிரபலங்கள் ட்விட்டரில் பேசி வருகின்றனர். நேற்றைய ஆட்டத்தில் தோல்வியடைந்தாலும் தோனியை பல பிரபலங்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.