உலகக்கோப்பை சூப்பர் ஓவரில் சிக்ஸர் அடித்த போது, அதிர்ச்சியில் உயிரிழந்த பயிற்சியாளர்!
coach died in world cup final
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப்போட்டியானது சமமான நிலையில் முடிந்ததால் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. ஆனால் சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் சமமாக 15 ரன்களை எடுத்திருந்தனர். இதனால் அதிக பவுண்டரிகள் அடித்த இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த போட்டியின் போது சூப்பர் ஓவரில் 15 ரன்களை எதிர்த்து ஆடிய நியூசிலாந்து அணியின் ஜிம்மி நீசம், 2வது பந்தில் சிக்ஸர் அடித்து அசத்தினார். அவர் சிக்ஸர் அடித்ததை வீட்டில் இருந்து பார்த்து கொண்டிருந்த அவருடைய சிறு வயது பயிற்சியாளர் டேவிட் ஜேம்ஸ் கார்டன், திடீரென அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார். இந்த செய்தியினை அவருடைய மகள் லியோனி வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் ஜிம்மி நீசம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "டேவ் கார்டன், எனது உயர்நிலைப் பள்ளி ஆசிரியர், பயிற்சியாளர் மற்றும் நண்பர். இந்த விளையாட்டின் மீதான உங்கள் காதல் தொற்றுநோய் போல இருந்தது. குறிப்பாக உங்களுக்கு கீழ் விளையாடியது எங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம். நீங்கள் பெருமிதம் அடைந்தீர்கள் என்று நம்புகிறேன். அனைத்திற்கும் நன்றி RIP" என ஜிம்மி நீசம் ட்விட் செய்துள்ளார்.