பரிதாபமான நிலையில் டெல்லி அணி! புலம்பி தீர்க்கும் டெல்லி அணி ரசிகர்கள்!
Delhi capitals scored lowest score against to chennai super kings

ஐபில் சீசன் 12 . மும்பை அணியுடன் இறுதி போட்டியில் விளையாட போகும் அணியை தீர்மானிக்கும் இன்றைய போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணி விளையாடி வருகிறது. இரண்டு அணிகளுமே வலுவான நிலையில் இருப்பதால் இன்றைய ஆட்டம் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது.
முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய டெல்லி அணி வீரர்கள் தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் அடுத்தடுத்து வரிசையாக விக்கெட்டுகளை இழக்க ஆரம்பித்தனர்.
டெல்லி அணியின் நம்பிக்கை வீரரான அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் 17 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 38 ரன் எடுத்தார். டெல்லி அணி இன்றைய ஆட்டத்தில் இமாலய இலக்கை எட்டும் என டெல்லி அணி ரசிகர்கள் காத்திருந்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 9 விக்கெட் இழப்பிற்கு 147 ரன் மட்டுமே எடுத்துள்ளது.
148 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் சென்னை அணி இன்னும் சற்று நேரத்தில் களமிறங்க உள்ளது.