தல தோனியின் தீவிர ரசிகரின் உண்மை முகத்தை பார்த்திருக்கிறீர்களா? இதோ உங்களுக்காக
Dhoni fan's real face revealed
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவருடைய தீவிர ரசிகர் ஒருவரின் நிஜ போட்டோ ஒன்று வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அழிக்க முடியாத இடத்தை பிடித்திருப்பவர் தோனி. அதேபோல் பல ரசிகர்களின் மனதில் இருந்தும் தோனியின் பெயரை நிச்சயம் அழிக்கவே முடியாது. அந்த அளவிற்கு தோனியின் மீது தீராத பற்றுக்கொண்ட ரசிகர்கள் இங்கு உள்ளனர்.
மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அசைக்க முடியாத கேப்டன் தோனிக்கு சென்னையில் ஏராளமான ரசிகர்கள் உண்டு. அதிலும் சில ரசிகர்கள் தோனியின் முழு உருவமாகவே அனைத்து போட்டிகளிலும் வர்ணம் தீட்டிக்கொண்டு ஆட்டத்தை காண வருவர்.
அதில் அந்த ஒரு ரசிகரை தோனி ஆடும் அனைத்து ஆட்டங்களிலும் பார்க்க முடியும். அந்த ரசிகர் முகம் முழுவதிலும் மஞ்சள் நிற வர்ணத்தை பூசிக்கொண்டு தோனியின் பெயரையும் தோனியின் நம்பர் 7 ஆகியவற்றையும் உடம்பில் எழுதிக்கொள்வார்.
இதுவரை முகத்தில் வர்ணத்துடன் தோன்றிய சரவணன் ஹரி என்ற அந்த ரசிகரின் நிஜ முகம் முதல் முறையாக தற்போது வெளியாகியுள்ளது. மேலும் அவர் வர்ணம் பூசிக்கொள்ளும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.